இராஜதுரை எம்.பி. ஐ.தே.க.வில் இணைவு

Friday, November 21, 20140 comments


ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய தொழிலாளர் சங்கத்தின் உப தலைவரும் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி பே.இராஜதுரை ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகி தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்துகொண்ட உறுப்பினர் இராஜதுரை கடந்த சில மாதங்களாக சுயாதீனமாக செயற்பட்டு வந்தார்.

பொதுவேட்பாளர் அறிவிப்பு நேற்று வெ ளியிடப்பட்டதையடுத்து இராஜதுரை எம்.பி. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு விஜயம் செய்ததாகவும் இங்கு முக்கிய கலந்துரையாடலி ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட் கிழமை அவர் ஐ.தே.க. வரிசையில் அமர்ந்துகொள்ளவுள்ளதாகவும் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பார் என்றும் நம்பப்படுகிறது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham