எதிர்கட்சிகளுடன் இணைந்தவர்களின் பதவிகளும் கட்சி உறுப்புரிமையும் பறிப்பு
Friday, November 21, 20140 comments
மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரட்ன, துமிந்த திஸாநாயக்க, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோரை அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி நீக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்தோடு அவர்களின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் எதிரணியின் பொது வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக கடமையாற்றிய மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள் இதற்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment