மைத்திரிபால சிறிசேன கடந்து வந்த பாதை ஒரே பார்வையில்...
Friday, November 21, 20140 comments
மைத்திரிபால சிறிசேன (சிங்களம்: මෛත්රිපාල සිරිසේන) என்றழைக்கப்படும் பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன (Pallewatte Gamaralalage Maithripala Yapa Sirisena, பிறப்பு: 3 செப்டம்பர் 1951)[1] இலங்கை சிங்கள அரசியல்வாதி ஆவார். 1979 ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்த இவர் 1989 முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1994 முதல் இலங்கை அமைச்சரவையில் பல பொறுப்புகளை வகித்து வருகிறார். இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். 2008 ஆம் ஆண்டில் இவர் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் காயமெதுவும் இன்றி உயிர் தப்பினார்.
ஆரம்ப வாழ்க்கை
1951 இல் பிறந்த இவர் பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்.[2] பின்னர் குண்டசாலை விவசாயக் கல்லூரியில் படித்து 1973 ஆம் ஆண்டில் டிப்புளோமா பட்டம் பெற்றார். 1971 ஜேவிபி புரட்சியின் போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.[3] 1980 இல் இவர் உருசியாவின் மாக்சிம் கோர்க்கி கல்விக்கழகத்தில் அரசியல் அறிவியலில் டிப்புளோமா பட்டம் பெற்றார்.[4]
அரசியலில்
1979 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிரிசேன இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் மாவட்ட செயலாளராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
1989 ஆம் ஆண்டில், பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற சென்றார். 1994 தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தார். இதன் பின்னர் இவர் மகாவலி அபிவிருத்தித் துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3]
படுகொலை முயற்சி
2008 அக்டோபர் 9 இல் கொழும்பின் புறநகரான பொரலஸ்கமுவ என்ற இடத்தில் சிறிசேன சென்ற வாகன அணித் தொடர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்களால் தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் சென்ற வாகனம் தாக்குதலில் இருந்து தப்பியது. ஆனாலும் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.[5]
2015 அரசுத்தலைவர் தேர்தல்
2015 ஆம் ஆண்டு சனவரியில் இடம்பெறவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தலில் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுக்கு எதிராகத் தாம் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக மைத்திரிபால சிறிசேன 2014 நவம்பர் 21 இல் அறிவித்தார். தாம் பதவிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப் போவதாகக் கூறியுள்ளார்
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment