''அநீதி ஆட்சி நடத்தும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள மாட்டோம் ''

Monday, November 24, 20140 comments


பொது மக்கள் வழங்கிய பெறுமதியான வாக்குகளை பணத்திற்காக காட்டிக் கொடுக்கத் தயார் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய பாலித்த தெவரப்பெரும மற்றும் பாலித்த ரங்கேபண்டார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இருவரும் ஆளும் கட்சிக்கு செல்லவுள்ளதாக ஊடக செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருவதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கேபண்டார ஆகியோர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

நீதிக்கு புறம்பான ஆட்சி நடத்தும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள தாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham