ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்றுமுதல் ஏற்பு

Monday, November 24, 20140 comments


ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகிறது.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக டிசம்பர் மாதம் ஏழாம் திகதி மதியம் வரையில் தேர்தல்கள் திணைக்களத்திற்கு வருகைத் தந்து கட்டுப்பணத்தை செலுத்த முடியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 50 ஆயிரம் ரூபாய் கட்டுப்பணத்தையும், சுயாதீனமாக போட்டியிடுகின்ற வேட்பாளர் 75 ஆயிரம் ரூபாவை கட்டுப்பணமாகவும் செலுத்த வேண்டும்.

இதனிடையே, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அடுத்த மாதம் 8ஆம் திகதி,காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும்.

ஜனாதிபதி தேர்தல் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.

2015ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலின் அடிப்படையில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham