மக்களின் தீர்ப்பிற்கு தலைவணங்கத் தயார் – ஜனாதிபதி

Thursday, November 20, 20140 comments


அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் உரிமை நாட்டு மக்களிடமே இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மக்களின் தீர்ப்பிற்கு தலைவணங்குவதற்கு ஆட்சியிலுள்ள அரசாங்கம் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்களுடன் அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த கருத்துகளை கூறினார்.

நாட்டிற்கு சேவையாற்றிய, நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாத்த தற்போதைய அரசாங்கம் எப்போதுமே மக்களின் நம்பிக்கையை வெற்றிகொண்டுள்ளதாக இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

மக்களின் ஆசிர்வாதத்துடன் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham