ஜனாதிபதி தேர்தலில் தீர்மானமிக்கும் சக்தி தாங்களே - பொது பல சேனா
Monday, November 17, 20140 comments
ஜனாதிபதித் தேர்தலில் தமது அமைப்பு எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை என்று பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக பொதுபல சேனா இன்னும் தீர்மானிக்கவில்லை என அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தாங்களே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தீர்மானமிக்க சக்தியாக திகழப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கடந்த வாரம் ஜனாதிபதிக்கு ஆதரவாக அமைச்சர் விமல் வீரவங்சவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுபலசேனாவின் தலைவர் கிரமவிமலஜேதி தேரர் கலந்துகொண்டு உறையாற்றியிருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பௌத்த சிங்களவராக இருப்பதால் அவரை பலர் எதிர்ப்பதாகவும் அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment