தாயும் மகளும் ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் சில மணித்தியால இடைவெளியில் குழந்தைகளை பிரசவித்த சம்பவம் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த பிரசவங்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஹீதர் பென்ரிகோப் (40வயது ) என்ற தாயும் டெஸ்ரினி மார்ட்டின் (20வயது) என்ற மகளும் இந்த வருட ஆரம்பத்தில் ஒரே தினத்தில் மாலை வேளையில் தாம் கர்ப்பமாகவுள்ளதை அறிந்து கொண்டனர்.
இந்நிலையில் வெவ்வேறு மருத்துவ காரணங்களுக்காக இருவரும் ஒரே தினத்தில் தமது குழந்தைகளை பிரசவிக்க நேர்ந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை போர்ட் மையர்ஸ் நகரிலுள்ள லீ ஞாபகார்த்த மருத்துவமனையில் பென்ரிகோப் பெண் குழந்தையொன்றையும் அவரது பிரசவத்துக்கு சில மணி நேரம் கழித்து டெஸ்ரினி ஆண் குழந்தையொன்றையும் பிரசவித்துள்ளனர்.
பென்ரிகோவின் குழந்தைக்கு மெடலின் எனவும் டெஸ்ரினியின் குழந்தைக்கு டாமியன் எனவும் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

Post a Comment