அரசாங்கம் லஞ்சங்களை வழங்கவில்லை; நாளாந்தம் விருந்துபச்சாரம் மட்டுமே – சுசில்
Monday, November 17, 20140 comments
அரசாங்கம் அரசியல் ரீதியான லஞ்சங்களை எவருக்கும் வழங்கவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையின் நாளாந்த செலவுகள் தொடர்பில் கருத்து வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். உரிய அதிகாரிகளுக்கு மட்டுமே நாளாந்த செலவுகள் பற்றி தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு சில அனுசரணையாளர்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவர்களின் உதவியுடன் அலரி மாளிகையில் அண்மைக்காலமாக நாள் தோறும் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாள் தோறும் சுமார் 5000 பேருக்கு விருந்துபசாரங்கள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் அரசியல் ரீதியான லஞ்சம் வழங்கலில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிலும் இவ்வாறான நிதி திரட்டல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment