விலகி சென்றவர்களுக்கு பஷில் மீண்டும் அழைப்பு

Sunday, November 23, 20140 comments



அரசாங்கத்தில் இருந்து விலகி சென்ற குழுவினர் மீண்டும் அரசாங்கத்துடன் ஒன்றிணையுமாறு அமைச்சர் பசில் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

கொலன்னாவ ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

கொலன்னாவ தேர்தல் தொகுதியின் பிரதான ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் நேற்று சாலமுல்லயில் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது அவர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார் அவர் அங்கு உரையாற்றுகையில்,

ஜனாதிபதி தேர்தலை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர், எதிர்கட்சி வேட்பாளரையும் தெரிந்து கொண்டு நான் திறக்கும் முதலாவது அலுவலகம் இதுவாகும்.

பொதுவேட்பாளராக மதகுருவே அந்த சங்கீத நாற்காலி போட்டி போன்று சுற்றி வந்தனர். இதில் யார் அமருவார்கள் என்று. நாங்கள் நினைத்தது போன்று யாரும் அமரவில்லை.

அவர்களுக்கு தெரியும் அந்த சரத் பொன்சேகாவிற்கு நடந்தது போலவே நடக்கும் என்று. சிலரை பலவந்தமாக அமர செய்ய முற்பட்டனர். எனினும் முடியாது போனது. இறுதியாக கடந்த முறை போலவே எங்களுடன் இருந்த ஒருவரை தேடி கொண்டனர். எனவே நாங்கள் அனுதாபபடுகிறோம்.

நாங்கள் இன்று அவர்களை மீண்டும் அழைக்கின்றோம். எங்களுக்கு தெரியும் சிலர் இதய சுத்தியுடன் செல்லவில்லை என்று.

நாட்டு மக்களை காப்பாற்றும் வேலைத்திட்டங்களுக்காக இணைந்து கொள்ள அவர்கள் மீண்டும் வந்து இணைந்துகொள்ள முடியும் என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham