எதிர்கட்சிகள் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகமொன்றை அமைத்துள்ளதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அச்சமடைந்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ரணில் போட்டியிடாது வேறு ஒருவரை களமிறக்கி முதலில் ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பதற்கு எதிர்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது. அத்தோடு பிரதமர் பதவிக்கு முக்கியத்துவமளித்து அதிகாரத்தையும் அதிகப்படுத்தி ரணிலை அப்பதவியில் அமர்த்த எதிர்கட்சிகள் திட்டமொன்றை தீட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை சிறந்த முறையில் வழிநடத்தும் திறமை ரணிலிடம் இருப்பதனால் நிருவாகத்தை அவரிடம் ஒப்படைக்க எதிரணிகள் தீர்மானித்துள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அந்த எதிரணி வேட்பாளர் பெரும் சவாலாக இருப்பார் என்றும் இதனால் அவர் கலக்கமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Post a Comment