கொழும்பில் அமைக்கப்பட்ட மிதக்கும் சந்தைகள் சரிந்தன
Friday, November 7, 20140 comments
கொழும்பு, புறக்கோட்டையில் 150 மில்லியன் ரூபா செலவில் அரசாங்கத்தினால் அண்மையில் நிர்மாணித்த மிதக்கும் சந்தையின் கடைகள் சில சரிந்துள்ளதோடு, மேலும் சில கடைகள் சரியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் நெறியாள்கையில் நகர அபிவிருத்தி அதிகாரசபை நிர்மாணித்த இக்கடைகள் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி அமர்க்களமாகத் திறந்து வைக்கப்பட்டிருந்தன.
இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் பொறியியல் பிரிவுகள் ஒன்றிணைந்தே இந்த நிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது மழைக் காலம் என்பதால் இந்த மிதக்கும் சந்தைகள் சரிந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment