குவைத்தில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்ததாக கூறி, இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பெண்ணொருவரிடம் கொள்ளையிட்டதாக கூறப்படும், மற்றுமொரு இலங்கையர்
தொடர்பிலும் குவைத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர் சாரதியாக பணி புரியும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் குறித்த பெண் பணத்தை வைப்பிலிடுமாறு கொடுத்துள்ளார். எனினும்
அவர் அதனை வைப்பிலிடாது பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகச்
செய்திகள் குறிப்பிடுகின்றன.
இவர் தொடர்பில் குவைத் பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குவைத்தில் ஹெரோயின் விற்ற இலங்கையர் கைது
Saturday, November 8, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment