அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா, ஈரானின் அரசியல் தலைவர் அயதுல்லா அலி கொமெனிக்கு இரகசிய கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் குறித்தும், அணு உடன்படிக்கை ஒன்று குறித்தும் இந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒபாமா இவ்வாறு நான்கு முறை ஈரானுக்கு இரகசிய கடிதங்களை அனுப்பி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த கடிதம் குறித்து வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தவில்லை.

Post a Comment