ரிஷாதின் கட்சியில் மீண்டும் பிளவு?

Thursday, November 27, 20140 comments


ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் மீண்டுமொரு பிளவு ஏற்படவுள்ளதாக தெரிய வருகிறது.

ஏற்கனவே நேற்றைய தினம் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொண்டார். இந்நிலையில் மற்றுமொரு முக்கிய உறுப்பினர் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சி அல்லது முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்துகொள்ளவிருப்பதாக தெரியவருகின்றது.

2004 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்த குழுவினர் ரிஷாட் தலைமையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியை உருவாக்கினர். பின் அரசுடன் ஒட்டிக்கொண்ட அமைச்சுப்பதவிகளை பெற்ற அக்கட்சி கடந்த வருடம் தமது கட்சியில் இருந்த முஸ்லிம் என்ற நாமத்தை நீக்கி மக்கள் என்ற நாமத்தை இணைத்துக்கொண்டது. இந்நிலையில் தற்போது அக்கட்சி பிளவுகளை சந்தித்து வருகின்றது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham