ஆளும் கட்சியின் மிஹிந்தலை பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் தோல்வி

Thursday, November 27, 20140 comments


மிஹிந்தலை பிரதேச சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு  திட்ட வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டுள்ளது.

ஒரு மேலதிக வாக்கினால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையில் ஒன்பது உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இதில் ஆறு பேர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை  சேர்ந்தவர்களாகும்.

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் மூன்று உறுப்பினர்களே சபையில் உள்ளனர். உப தலைவர் லக்ஸ்மன் செனவிரட்ன உள்ளிட்ட மூன்று பேர் வாக்கெடுப்பின் போது பிரசன்னமாகியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆளும் கட்சியின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham