பொதுபலசேனா மஹிந்தவுக்கு ஆதரவு: முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

Thursday, November 27, 20140 comments


பொது பல சேனா அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க தீர்மானித்துள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் எவ்வாறான தீர்மானத்தை எடுக்க போகின்றது என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை மஹிந்த அரசாங்கத்தின் ஆதரவுடன் பொது பல சேனா அமைப்பினர் அரங்கேற்றி வந்த நிலையில் தொடர்ந்தும் அரசாங்கத்தில் அடைபட்டு கிடந்தது முஸ்லிம்கட்சிகள். ஆட்சி மாற்றத்தின் ஊடாக பொதுபலசேனாவின் கொற்றத்தை அடக்க முடியும் என்கின்ற நிலைப்பாடு இருக்கின்றபோது முஸ்லிம் கட்சிகள் அதற்கான ஒத்துழைப்பை வழங்குமா என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தேசிய காங்கிரஸ் கண்ணை மூடிக்கொண்டு மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்கும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இதுவரை தீர்மானம் எடுக்காதுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் கடந்த வாரம் கூடிய போது அரசுக்கு எதிராக பலர் கருத்து வெ ளியிட்ட போதிலும் உயர் மட்டத்தில் அரசுக்கு ஆதரவுபோக்கையே காட்டியிருந்தது. அதேபோன்று திங்கட்கிழமை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடத்திலும் அரசுக்கான எதிர்ப்பலையே ஓங்கியிருந்தது. என்றாலும் இரு கட்சிகளும் இறுதி தீர்மானத்திற்கு வாராதுள்ளது. இப்போது முஸ்லிம்களின் எதிரிகளான பொதுபலசேனாவின் அறிவிப்பை தொடர்ந்து முஸ்லிம் கட்சிகளின் முடிவுகள் எதிர்கப்பார்க்கப்படுகிறது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham