பொய் பிரசாரங்களை முன்னெடுக்க அலரி மாளிகையில் தனி பிரிவு - கிரியல்ல
Monday, November 17, 20140 comments
'ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பாக பொய்ப் பிரசாரத்தை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக அலரி மாளிகையில் தனிப்பிரிவை அரசாங்கம் உருவாக்கியுள்ளது' என ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி, மாவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
'அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்துள்ளது. கம்பளை தொகுதியை எதிர்வரும் தேர்தலில் ஐக்கியத் தேசிய கட்சி வென்றெடுக்கும். இத் தொகுதியில் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கட்சித் தலைமை விரைவில் முடிவுகளை மேற்கொள்ளும்' எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கம்பளை தொகுதி ஆதரவாளர்களின் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கம்பளையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்;ந்தும் உரையாற்றிய அவர்,
'ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையப் போவதாக பொய்ப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றதொரு நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து எவரும் ஆளுந்தரப்புடன் இணைய போவதில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டமைக்கு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது.
ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி புலம்பெயர்ந்தோர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். இவ்வழக்கு நான்கு வருடங்கள் நீடித்த போதிலும் அரசாங்கம் அதற்கு எதுவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனை மறைத்து, தமிழீழ விடுதலை புலிகள் மீதான நீக்கத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின்மீது குற்றம்சாட்டுவதில்லை பயனில்லை.
இன்னும் சில தினங்களில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சி எத்தேர்தல்களுக்கும் தயாராகவுள்ளது' என்றார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment