கட்சிகள் ஒத்துழைத்திருந்தால் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்திருக்கலாம் - ஜனாதிபதி
Sunday, November 23, 20140 comments
அரசியல் பழிவாங்கல் மற்றும் அவதூறு செய்தல் என்பன தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை அல்லவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்
நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் நடவடிக்கையை ஆரம்பித்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முன்பே இரத்து செய்திருக்கலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வேன். இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குழு ஒன்றும் அமைத்தேன். இவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவ்வாறு வழங்கியிருந்தால் அதனை ஏற்கனவே இரத்து செய்திருக்கலாம்.
ஆகவே இதனை இரத்து செய்வதற்கு எம்மாலேயே முடியும். அதனை பாராளுமன்றத்திலேயே செய்ய முடியும். இன்று வேண்டுமானாலும் செய்யலாம். மூன்றில் இரண்டு அதிகாரத்தை பயன்படுத்தி சர்வஜன வாக்கெடுப்பினூடாக மாற்றியமைக்க முடியும். இதுதான் நிலைமை. அதனை நாட்டிற்கு வெளிப்படுத்தாது வேறு ஆபத்தான உலகமொன்றை காண்பிக்க முற்படுகின்றனர்.
இதன்போது பொது வேட்பாளர் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவித்தார்.
இம்முறை என்னுடன் போட்டிக்கு வருபவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் ஒருவரே. அதாவது திஸ்ஸ அத்தநாயக்க எமது கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதனை போன்றவாறே தற்போது இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சிக்கு எமது செயலாளர் சென்று இன்று போட்டியிடுகின்றார். பாவம் என்ற பதிலையே நான் கூறவிரும்புகின்றேன்.
2010ஆம் ஆண்டில் பொன்சேகா இவ்வாறு சிக்கிக் கொண்டார். இம்முறை மைத்திரிபால சிறிசேன. ரணிலுக்குத் தற்போது வீட்டிலும் வெளியிலும் மைத்திரி. பண்டாரநாயக்க அவர்கள் அன்று ஸ்தாபித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆரம்பித்த பயணம் பல சந்தர்பங்களில் பின்நோக்கிச் சென்றது. அரச சேவையை அழித்து நாட்டின் வளங்களை விற்ற கலாசாரம் காணப்பட்ட காலப்பகுதியில் பொறுப்புடைய அரசியல் தலைவர்களின் கட்சி இன்று முதலைக் கண்ணீர் வடிக்க தயாராகின்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment