ஜனவரியில் எஸ்.எம்.எஸ். சேவையை முடக்க அரசு திட்டம் - மங்கள

Thursday, November 27, 20140 comments


எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி முதல் எட்டாம் திகதி வரை எஸ்.எம்.எஸ். சேவைகளை முடக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எஸ்.எம்.எஸ். ஊடாக தேர்தலில் எதிர்க்கட்சிகள் தம்மை பலப்படுத்திக்கொள்ளும் என்கிற அச்சம் காராணமாகவே அரசு இவ்வாறான திட்டமொன்றை மேற்கொள்கிறது. இத்திட்டத்தை நடைமுறை படுத்துவதற்காக சீனாவிலிருந்து தொழிநுட்ப நிபுனர்கள் வரவழைக்கப்படவுள்ளனர். அவர்களின் ஆலோசனைக்கு ஏற்பவே இவ்வாறானதொரு திட்டத்தை அரசு மேற்கொள்கிறது. இது அடக்கு முறையாகும் எனவும் மங்கள தெரிவித்தார்.

இன்று(27) ஐ.தே.க. தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham