முஸ்லிம்களே அமெரிக்காவை கண்டுபிடித்தனர் – துருக்கி ஜனாதிபதி
Sunday, November 16, 20140 comments
கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடிப்பதற்கு முன்னரே முஸ்லீம்கள் அதனை கண்டுபிடித்ததாக துருக்கிய ஜனாதிபதி ரீப் ரேயீப் ஈர்டொகன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரான்புல்லில், லத்தீன் அமெரிக்க முஸ்லீம் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின் போதே அவர் இந்த கருத்தினை தெரிவித்தார்.
கியூபாவில் உள்ள மலை ஒன்றின் முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்று இருந்ததாக கொலம்பசின் நாட்குறிப்பில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடிப்பதற்கு முன்னர் முஸ்லீம் மாலுமிகள் ஆயிரத்து 178ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு சென்றிருந்ததாகவும் தெரிவித்தார்.
கொலம்பசினால் அடையாளம் காணப்பட்ட பள்ளிவாசலை மீள நிர்மாணிக்க தாம் விரும்புவதாகவும் துருக்கிய ஜனாதிபதி ரீப் ரேயீப் ஈர்டொகன் தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment