பொது வேட்பாளர் யார் என தேர்தல் அறிவிப்பின் பின்னர் தெரிவிப்போம் - ரணில்
Sunday, November 16, 20140 comments
ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள பொது வேட்பாளர் குறித்து, இந்த தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதன் பின்னரே அறிவிக்கப்படும் என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் ஒன்று அடுத்த வருடம் நடைபெறும் என்று ஜனாதிபதியே கூறி வருகிறார்.
இது இன்னும் உறுதியாக தெரியாகவில்லை.
தற்போது இந்த தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராகி வருகின்ற போது, தேர்தல் அறிவிப்பு வெளியானதன் பின்னர் தங்களின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும்.
தேர்தலுக்கான எதிர்கட்சியின் வளங்கள் மிகவும் குறைவாக இருக்கிறது.
எனவே தேர்தல் அறிவிப்பின் பின்னரே தங்களின் பொது வேட்பாளர் குறித்தும் அறிவிக்கப்படும் என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment