பசிலின் நிகழ்வை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புறக்கணிப்பு
Sunday, November 16, 20140 comments
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் கொழும்பில் இன்று (15) நடைபெற்ற மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், அமைச்சர் ரிஷாத் பதியுர்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிப்பு.
கிழக்கு மாகாண சபையிலுள்ள அக்கட்சியின் உறுப்பினர்களே இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
இது தொடர்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் தவிசாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் அரசியல் அதியுயர் பீடக் கூட்டத்தில் முடிவு செய்யவுள்ளது.
அதற்கிடையில் அரசாங்கத்தின் உயர் மட்டக் கூட்டங்களில் நாம் பங்கு கொள்வதில்லையென கட்சியின் கடந்த 11.11.2014ஆம் திகதிய அரசியல் உயர் பீட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அந்த தீர்மானத்துக்கு அமைவாகவே அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று (15) நடைபெற்ற மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், கிழக்கு மாகாண சபையிலுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கு பற்ற வில்லையென அவர் தெரிவித்தார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில், நடத்தப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டத்துக்கு எமது அகில மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, சிப்லி பாறூக், மற்றும் எனக்கும் அழைப்புக்கள் அனுப்பப்பட்டிருந்தன.
எனினும், கட்சியின் தீர்மானத்துக்;கு அமைவாக இக் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளவில்லையென சுபைர் மேலும் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment