அரசு ஊடக சுதந்திரத்தை வழங்க வேண்டும் - சுஜீவ சேனசிங்க எம்.பி.
Monday, November 17, 20140 comments
உலகில் எந்தவொரு தலைவரும் மூன்று தடவைகள் போட்டியிடவில்லை. ஆனால் இலங்கையில் தலைவர் மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றார் என கடந்த வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. சுஜீவ சேனசிங்க நாட்டை ஆசியாவில் ஆச்சரியமிக்க நாடாக மாற்ற வேண்டுமானால் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை வழங்க வேணடும் என்றார்.
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான தகவல் ஊடகத்துறை அமைச்சின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே சுஜீவ சேனசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment