ஜனாதிபதியின் பிறந்த தினத்திற்காக அமைச்சர் பஷிர் சேகுதாவூதின் பரிசு
Monday, November 17, 20140 comments
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷிர் சேகுதாவூத் ஏற்பாடு செய்த இலவச கொரிய ஆயுர்வேத வைத்திய முகாம் நவம்பர் மாதம் 18,19,20 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளது.
புதுக்குடியிருப்பு சித்த வைத்திய ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலை மற்றும் ஏறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலை ஆகிய இடங்களில் இந்த நிகழ்வு நடைபெறும்.
குறித்த இலவச ஆயுர்வேத வைத்திய முகாமில் நாள்பட்ட குறுகிய கால நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் என உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.
கொரிய சர்வதேச கூட்டுத்தாபன ஒன்றியம், கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன் நடைபெறவுள்ள இவ் வைத்திய முகாமின் பிரதான வைபவம் 19-11-2014 புதன்கிழமை காலை 08.00 மணிக்கு புதுக்குடியிருப்பு சித்த வைத்திய ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெறும்.
இதில் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷிர் சேகுதாவூத், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சாரள்ஸ் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment