அரசாங்கத்துடன் சேராமல் உரிமைகளை வென்றெடுக்க முடியாது: பைசர்

Wednesday, November 26, 20140 comments


அரசாங்கத்துடன் சேராமல் தனித்து இருந்து செயற்பட்டால் சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என  என தொழில்நுட்பத்துறை பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் சேர்ந்து தான் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். விலகி நின்று எதனையும் சாதிக்க முடியாது. இன்று பல உலக நாடுகளின் சிறுபான்மை இனத்தவர்களை சேர்ந்தவர்களே நாட்டின் தலைவர்களாக இருக்கின்றனர். ஆனால் இலங்கையில் தமிழர் சிங்களவர் முஸ்லிம் என இன்னமும் பிரிவினை வாதம் காணப்படுகின்றது.

வாக்குகளை பெறுவதற்காக பிரிவினைவாதம் பேசிகொண்டிருக்கின்றனர். இந்த பிரிவினை வாதத்தை சாதமாக பயன்படுத்திகொண்டு எதிரணியினர் அரசியல் செய்ய முற்படுகின்றனர். தயவு செய்து பிரிவினை வாதத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டுடாம். இதனால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படபோவதில்லை.

நான் தேர்தலில் போட்டியிட்ட போது பெருபான்மை மக்ளின் வாக்குளாலே வெற்றி பெற்றேன். பிரிவினையின்று செயற்பட்டமையே இவ்வாறு மக்கள் எமக்கு வாக்களித்தனர். இதுபோன்றே ஜனாதிபதியும் பயங்கரமான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பிரிவினையின்றி மக்களுக்கு நலன்களை பெற்றுகொடுத்துள்ளார். எனவே இந்த தேர்தலில் முஸ்லிம் தமிழ் மக்களின் வாக்குகள் ஜனாதிபதிக்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கே கிடைக்கும் என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham