முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனாவின் நடவடிக்கைக்கு ஐ.நா. எதிர்ப்பு

Wednesday, November 26, 20140 comments


முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனாவின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. பொதுபல சேனா இயக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி ரிட்டா இசாக் தெரிவித்துள்ளார்.


கடந்த இரண்டு ஆண்டுகளில் முஸ்லிம்கள் மீது 300 தாக்குதல் சம்பவங்களும், கிறிஸ்தவர்கள் மீது 150 தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பில் ஜெனீவாவில் சமர்ப்பித்த அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


கடும்போக்கு சிங்கள பௌத்த கொள்கைகளை பொதுபல சேனா இயக்கம் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்கள் மத்தியில் பீதி ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


சில நாடுகளில் சிறுபான்மையின பெண்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையை பொருத்தமட்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் மற்றும் மனித உரிமை விவகாரங்களுக்கு ஐக்கிய நாடுகளின் கிளை நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


குறிப்பாக மனித உரிமை மீறல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய ஒர் பொறிமுறைமயை ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனங்கள் பின்பற்றத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham