தமிழ் - முஸ்லிம் குழுக்களுக்கிடையே மேதல்: இறக்வானையில் பதற்றம்

Wednesday, November 26, 20140 comments


இறக்குவானை டெல்வின் பி பிரிவில் தமிழ் - முஸ்ம் இனக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (25) இரவு இடம்பெற்றறுள்ளது.

இறக்குவானை டெல்வின் பி பிரிவில் கடைக்கு சென்ற இளைஞர் ஒருவர் மீது மறைந்திருந்த இளைஞர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இவரை பாதுகாக்க சென்றவர்கள் மீதும் அந்த இளைஞர்கள் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் இளைஞர் ஒருவரும் வர்த்தகர் ஒருவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் காவத்தை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

மேற்படி சம்பவத்தால் இறக்குவானை டெல்வின் பிரிவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவந்துள்ளதாவது,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறக்குவானை டெல்வின் பிரிவில் 16 வயது சிறுமியை இளைஞன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்து தப்பி சென்ற போது இவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு மேற்படி டெல்வின் பிரிவை சேர்ந்த இளைஞர்கள் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதன் பின்னர் சம்பந்தபட்டவர், பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரனை நடாத்தி நீதி மன்றத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் முஸ்லிம் இளைஞனுக்கு எதிராக செயற்பட்ட தமிழர்கள் மீதே சம்பந்தப்பட்ட இளைஞனும் அவரது சகோதரர்களும் நேற்று(25) இரவு மறைந்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் முஸ்லிம் இளைஞர் மீது அபாண்டமாக பலி சுமத்தப்படடதாகா அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேற்படி சம்பவம் குறித்து இறக்குவானை பொலிசார் இருவரை கைதுசெய்துள்ளனர். இதில் ஒருவர் இறக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham