பொது வேட்பாளராக சந்திராக்கா அல்லது கரு?
Sunday, November 9, 20140 comments
ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளாராக கருஜெயசூர்யவை நிறுத்துவதா அல்லது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை நிறுத்துவதா என்ற இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுவதாக தெரியவருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபை இந்த இருவரினதும் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.முக்கிய எதிர்க்கட்சி சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்க்கு ரணில்விக்கிரமசிங்க இணங்கியதை தொடர்ந்து கட்சி இது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது.
வெள்ளிக்கிழமை மாலை கட்சியின் ஜி.20 குழு இது குறித்த ஆராய்ந்துள்ள போதிலும் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது.
எனினும் கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள் பண்டாரநாயக்க குடும்பத்தைசேர்ந்தவர்களை நியமிப்பதை எதிர்த்துவருகின்றனர்.
இதேவேளை பௌத்த மதகுருமார்கள் குழுவொன்று கருஜெயசூர்யவிற்க்கு ஆதரவாகஅறிக்கையொன்றை விடுப்பதற்க்கு தயாராகிவருவதாகவும் தெரிய வருகின்றது.இலங்கiயின் பௌத்த மதகுருமாரின் ஆதரவை கருஜெயசூர்ய பெறக்கூடியதாக இருப்பது மிகமுக்கியமான விடயம் என கட்சிக்குள் கருத்து காணப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி கருஜெயசூர்யவை நியமித்தால்அவருக்கு ஆதரவளிக்க சந்திரிகா குமாரதுங்கவும், அத்துரலிய ரத்ன தேரரும் இணங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
எனினும் ரணிலின் நெருங்கிய நண்பரான மலிக் சமரவிக்கிரமவும் வேறு சிலரும் முன்னாள் ஜனாதிபதிக்கு சார்பான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment