ரத்ன தேரர் வெளி சக்திகளிடம் சிக்கியிருக்கிறார் - எஸ்.பி.
Friday, November 21, 20140 comments
அத்துரலிய ரதண தேரர் வெளிநாட்டு சக்திகளிடம் சிக்கி இருப்பதாக உயர் கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உடுநுவர – தவுலகல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ரதண தேரர் வெளிநாட்டு சக்திகளிடம் சிக்கிக் கொண்டிருப்பதாக தான் கருதுவதாக அவர் கூறியுள்ளார்.
யாரையாவது தேர்ந்தெடுத்து பொது வேட்பாளராக முன்னிறுத்தி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை விரட்டியடிக்க வேண்டிய தேவை அவருக்கு இருக்கிறது.
இதன்மூலம் அவர் விடுதலைப் புலிகளை மீளெழுப்ப முற்படுகிறார்.
அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க அவர் முயற்சிப்பதாகவும், அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment