கிழக்கு முதலமைச்சர் நஜீபுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
Sunday, November 16, 20140 comments
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றத் தீர்மானிக்க்பபட்டுள்ளது. கிழக்கு மாகாண எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்
எதிர்வரும் 24ம் திகதி இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர் அல்ல என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கும் முனைப்புக்களில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்;கப்படுகிறது.
தற்போதைய முதலமைச்சர் விருப்பு வாக்குகள் அடிப்படையிலும் குறைந்த விருப்பு வாக்குகளையே பெற்றுக்கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சி தமக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தற்போதைய முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment