நான் மிகவும் மன வேதனையில் இருக்கின்றேன்: மேர்வின் புலம்பல்
Sunday, November 16, 20140 comments
கடந்த கால சம்பவங்களால் தான் மிகவும் மன வேதனையுடன் இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பியகம பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எனது ஒரே மகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் நான் தளர்ந்து விடப் போவதில்லை. கொள்ளையடித்து, பெண்களை மானபங்கம் செய்து, ஹெரோயின் மற்றும் கஞ்சா விற்றதால் எனது மகன் சிறையில் அடைக்கப்படவில்லை. சண்டையிட்டதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு வருடமும் பல மாதங்களும் எனக்கு அதிகாரம் இருக்கவில்லை என்றார்
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment