ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணியாக நவ சமசமாஜ கட்சி களத்தில்
Sunday, November 23, 20140 comments
ஜனாதிபதி தேர்தல் களத்தில் மூன்றாவது அணியாக நவ சமசமாஜ கட்சி வேட்பாளரை நியமித்துள்ளது?
அக்கட்சியின் ஊடக பேச்சாளர் சுந்தரன் மகேந்திரன் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பில் நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாஹு கருணாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரசிங்க போட்டியிட்டிருந்தால் அவருக்கு ஆதரவளிக்க தமது கட்சி தயாராக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஆனால் அரசாங்கத்தின் அமைச்சராக இருந்து மைத்திரிபால சிறிசேனவே பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது கட்சி சார்பாக தனி வேட்பாளர் ஒருவரை நிறுத்த தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய சோசலிச கட்சியினும் தமக்கான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த தீர்மானித்துள்ளது.
அந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து அதன் வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்ற முற்போக்கு சோசலிச கட்சியும் தனி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த விருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment