தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமக்கு நீதியான தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் இலங்கையின் தெற்கில் உள்ள ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று நவசமாஜ கட்சியின் பிரதான செயலாளர் விக்ரமபாகு கருணாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
இதற்காக தெற்கில் உள்ள ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இதனை விடுத்து, இந்தியாவிடமோ, சர்வதேசத்திடம் சென்று முறையிடுவதனாலே எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை என்று விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்

Post a Comment