சுதந்திர கட்சி உறுப்பினர் ஐ.தே.க.வில் இணைவு
Friday, November 14, 20140 comments
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளரும் பாணந்துறை நகர சபைபிதாவுமான நந்தன குணதிலக்க நாளை பதவிகளை இராஜினாமா செய்ய உள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைப்பாளர் பதவியில் இருந்தும் நகர முதல்வர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பதவிகளை இராஜினாமா செய்வது சம்பந்தமான ஊடகவியலாளர் சந்திப்பு நாளை முற்பகல் நடத்தப்பட உள்ளதாக தெரியவருகின்றது.
ஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த நந்தன குணதிலக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆரம்ப இணை தலைவராக இருந்துள்ளார்.
ஜே.வி.பியிலிருந்து பிரிந்து விமல் வீரவன்ஸவுடன்தேசிய சுதந்திர முன்னணியை ஆரம்பித்த நந்தன குணதிலக்க, பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டார்.
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் பாணந்துறை நகர சபை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
இவ்வாறான நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகும் அவர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment