நிறைவேற்று அதிகாரம் ரத்து செய்யக்கோரி பாரிய போராட்டம்
Sunday, November 9, 20140 comments
நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்யுமாறு கோரி பாரியளவில் போராட்டமொன்று நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு முத்தையா பிள்ளை மைதானத்தில் எதிர்வரும் புதன்கிழமை இந்த போராட்டமும் பேரணியும் நடத்தப்பட உள்ளது.
நீதிக்கான சமூக அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரர் தலைமையில் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்தப் போராட்டத்தில் ஜாதிக ஹெல உறுமய கட்சியும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்யவும், பாராளுமன்ற ஆட்சி முறைமையை அறிமுகம் செய்யவும் இன்னமும் ஜனாதிபதிக்கு கால அவகாசம் இருப்பதாக மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான மக்களின் கருத்துக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த செவி சாய்த்தால் ஜனாதிபதி தேர்தலையே அடுத்த ஆண்டில் நடத்த வேண்டிய அவசியம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே நாட்டில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment