18 ஆம் திருத்தச் சட்டம் மஹிந்தவுக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது – ரணில்
Sunday, November 9, 20140 comments
18 ஆம் திருத்தச் சட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாதகமான சூழ்நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
18ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரையும் இணைத்துக் கொண்டு 18ம் திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றியமை ஜனாதிபதி இழைத்த மிகப்பெரிய தவறாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றிடம் ஜனாதிபதி ஏற்கனவே சட்ட விளக்கம் கோரியுள்ளார்.
நாளைய தினம் இது குறித்த விளக்கம் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் சட்ட விளக்கம் கோரியதன் மூலம் , தேர்தல் ஆணையாளருக்கு நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியுமா இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையாளரினால் சுயாதீனமான தீர்மானம் எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
சட்ட விளக்கம் மூலமாக வேட்பாளர் போட்டியிடுதல் தொடர்பில் தேவையற்ற தலையீடு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, ஜனாதிபதி தேர்தலை சுயாதீனமான முறையில் நடாத்துவதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment