ஐ.தே.க.வுக்கு முஸ்லிம் பிரிவு உதயம்; முஸ்லிம் லீக்கும் பக்கபலம்
Thursday, November 20, 20140 comments
ஐக்கிய தேசிய கட்சிக்குள் புதிய முஸ்லிம் பிரிவொன்று உருவாக்கப்பெற்றுள்ளது. இதற்கு பக்கபலமாக முஸ்லிம் லீக்கும் செயற்படவுள்ளது.
நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் முஸ்லிம் பாரளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு மந்திராலோசனை கூட்டமொன்றையும் நடத்தியுள்ளனர்.
முஸ்லிம்கள் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சி மீதான செல்வாக்கு வெகுவாக அதிகரிக்கும் நிலையில் இவ்வாறு பிரிவொன்றை ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் உருவாக்கியுள்ளனர்.
நேற்று பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஸிம் தலைமையில் ஸ்ரீகோத்தாவில் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம், மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், லாபிர் ஹாஜியார், இம்ரான் மஹ்ரூப், இப்திகார் ஜெமீல், பைரூஸ் ஹாஜியார், இப்றாஹீம், எஸ்.எம்.மரிக்கார் மற்றும் கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் முன்னாள் பிரதியமைச்சர் மஹ்ரூப் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இதனிடையே, மாவட்ட ரீதியிலும் தொகுதி ரீதியிலும் அங்கத்தவர்களும் இணைத்துகொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment