கரையோர மாவட்ட யோசனை குறித்த பிரே­ர­னையை நிராகரித்தது அக்கறைப்பற்று மாநகரசபை

Thursday, November 20, 20140 comments


கரை­யோர மாவட்டம் தொடர்­பான யோச­னையை முன்­வைத்து அக்­க­ரைப்­பற்று மாந­கர சபையின் தான் கொண்­டு­வந்த பிரே­ர­னையை நிரா­க­ரிக்­கப்­பட்­டமை ஜன­நா­ய­கத்­திற்கு முர­ணா­னது எனவும் இதனை வன்­மை­யாக கண்­டிப்­ப­தா­கவும் அச்­ச­பையின் எதிர்க்­கட்சித் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரி­வித்தார்.

இதே­வேளை அண்­மையில் கல்­முனைக் கரை­யோர மாவட்டம் தொடர்­பாக பெருந் தேசியக் கட்­சி­களால் வெளி­யி­டப்­பட்ட கருத்­துக்கள் குறித்தும் அவர் தமது கண்­ட­னத்தை தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
பெருந்­தே­சியக் கட்­சி­களின் சுய அர­சியல் இலா­பங்­க­ளுக்­கா­கவே ‘கல்­முனைக் கரை­யோர மாவட்டம்’ என்னும் முற்­போக்­கான தென் கிழக்குத் தமிழ்­பேசும் மக்­க­ளுக்­கான நிரு­வாகக் கட்­ட­மைப்புக் கோரிக்­கை­யா­னது தொடர்ந்­தேச்­சை­யாகப் புறந்­தள்­ளப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றது. இதில் பெருந்­தே­சியக் கட்­சி­களைச் சேர்ந்த அர­சி­யல்­வா­திகள் மட்­டு­மன்றி தமது சுய­நலம் கருதி அர­சி­யலில் ஈடு­பட்டு வரு­கின்ற முஸ்லிம் சமூக அர­சி­யல்­வா­தி­களும் இடை­யி­டையே சம்­பந்­தப்­பட்டு தமது வீட்டு வாச­ல­டியில் இக்­க­ரை­யோர மாவட்ட நிர்­வாகம் வந்­த­மைய வேண்டும் என எதிர்­பார்ப்­ப­த­னா­லேயே இம்­மக்­க­ளுக்கு எப்­போதோ கிடைத்­தி­ருக்க வேண்­டிய இக்­க­ரை­யோர மாவட்ட நிர்­வாகக் கட்­ட­மைப்­பா­னது இன்று வரைக்கும் பல­ராலும் மாறி மாறிப் பந்­தா­டப்­பட்டு வரு­வது நம் எல்­லோ­ரி­னது கவ­னத்­திலும் பதி­வா­கி­யுள்ள கசப்­பான உண்­மை­யாகும்.

கிழக்கு மாகா­ணத்தின் தென்­ப­கு­தியில் தமிழைத் தமது தாய்­மொ­ழி­யாகக் கொண்­டுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் அவர்­க­ளது அரச, நிரு­வாகக் கட­மை­களைத் தமது சொந்த மொழியில் மேற்­கொள்ளும் வகையில் நீண்ட கால­மாகக் கோரப்­பட்டு வந்­ததே “கல்­முனைக் கரை­யோர மாவட்டக் கோரிக்­கை­யாகும். இதனை எதிர்க் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களும், ஆளும் கட்­சியின் பிர­மு­கர்­களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் முஸ்­லிம்­க­ளுக்­கென பிரத்­தி­யே­க­மாக தமது சம­யத்­தையும், சமூக அடை­யா­ளத்­தையும் முன்­வைத்து நாட்டில் பிரி­வி­னையைத் தோற்­று­விக்க முனை­வ­தாகக் கூறு­வது சுத்த அபத்­த­மாகும்.

புதிய மாவட்­டங்­களை உரு­வாக்­கு­வ­தற்­கென ஆலோ­ச­னை­க­ளையும், பரிந்­து­ரை­க­ளையும் வழங்­கு­வ­தற்­காக 1978ஆம் ஆண்டு அன்­றைய அர­சினால் நிய­மிக்­கப்­பட்ட மொற­கொட ஆணைக்­கு­ழு­வா­னது அதன் பரிந்­து­ரை­களில் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள கல்­முனை, சம்­மாந்­துறை, பொத்­துவில் ஆகிய தேர்தல் தொகு­தி­களை உள்­ள­டக்­கி­ய­தாக “கல்­முனைக் கரை­யோர மாவட்டம்”  ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென அறிக்­கை­யிட்­டி­ருந்­தது.

மொற­கொட ஆணைக்­கு­ழுவின் நேர்­மை­யான அந்த அறிக்­கையை அன்­றி­லி­ருந்து தொடர்ந்­தேச்­சை­யாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த அர­சுகள் நிறை­வேற்­று­வ­தற்குத் தவறி வந்­துள்­ளன. இதனை காலங் கடந்­தா­யினும் இப்­போ­தா­யினும் நிறை­வேற்­றுங்கள் என்­றுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இந்த அர­சாங்­கத்தைக் கோரி நிற்­கின்­றது.

தமிழ் மொழியைப் பேசு­கின்ற, அம்­மொ­ழியில் கரு­ம­மாற்­றக்­கூ­டிய ஓர் அரச அதி­பரை நிய­மிக்­கு­மாறு தமிழ் - முஸ்லிம் மக்­களால் நீண்­ட­கா­ல­மாகக் கோரப்­பட்டு வந்த கோரிக்­கைகள் தொடர்ந்­தேச்­சை­யாக நிரா­க­ரிக்­கப்­பட்டே வந்­தி­ருக்­கின்­றன. கடந்த 43 ஆண்­டு­க­ளாக தமிழ் மொழி தெரிந்த ஓர் அரச அதி­பரை அம்­பாரைக் கச்­சே­ரியில் அமர்த்தி இங்கு வாழ்­கின்ற தமிழ்­பேசும் மக்­களின் நியாயமான தேவைகளை இலகுவாக வழங்கத் தவறிய கடின மனோபாவத்தில் அரசுகள் இருந்து வரும் வரலாற்றினை மாற்றியமைக்கவே இன்று கல்முனைக் கரையோர மாவட்டத்தினை நிறுவுவதன் மூலம் புரையோடிப்போயிருக்கின்ற இப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதற்கான அரசியல் முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றது என்றும் அவர் தெரவித்தார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham