முஸ்லிம்களின் கரையோர மாவட்ட யோசனைக்கு மரிக்கார் எதிர்ப்பு; ஐ.தே.க.வுக்குள் கண்டனம்

Thursday, November 20, 20140 comments


முஸ்லிம்களின் கரையோர மாவட்ட கோரிக்கைக்கு எதிராக சிங்கள ஊடகங்களில கருத்து தெரிவித்தமைக்கு ஐ.தே.க.வின் முஸ்லிம் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்களுக்கிடையிலான இரகசிய சந்திப்பொன்று நேற்றைய தினம் ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்றது. இதன்போது இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் அசவருக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, சமூக உயர்வுடன் அரசியல் நடத்தவேண்டும் எனவும் கண்டித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஸிம் தலைமையில் ஸ்ரீகோத்தாவில் இடம்பெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம், மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், லாபிர் ஹாஜியார், இம்ரான் மஹ்ரூப், இப்திகார் ஜெமீல், பைரூஸ் ஹாஜியார், இப்றாஹீம்,மற்றும் கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் முன்னாள் பிரதியமைச்சர் மஹ்ரூப் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham