ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் இறுதித் தீர்மானத்திற்கு வர முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்த பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட சந்திப்பின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment