எபோலாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,147 ஆக அதிகரிப்பு!
Sunday, November 16, 20140 comments
உலகளாவிய ரீதியில் எபோலாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,068 ஆகவும், தற்போதய கட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,147 ஆகவும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று (13) தகவல் வெளியிட்டுள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடுகளான லைபீரியா, கினியா, சியாரா லியோன் ஆகிய நாடுகளில் எபோலாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமாக 14000 மக்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் இதுவே ஒரே பிரதேசத்தில் அதிகூடிய பாதிக்கப்பட்டவர்களை உருவாக்கியுள்ள நோயாக தற்போது இனங்காணப்பட்டுள்ளதாக செய்தியறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எபோலாவினைத் தடுப்பதற்காக பல விதமான சட்டப்பிரகடணங்கள் மருந்து வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அவற்றின் பரவல் வீதம் குறைவடையவில்லை எனவும், சியாரா லியோனில் மட்டும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட 40 சதவீதமானோர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment