'ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, விஜேதாச ராஜபக்ஷ உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையப் போவதாக பரவும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை' என ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
கண்டி, மாவில் மடையிலுள்ள அவரது காரியாலயத்தில்; சனிக்கிழமை (9) நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளிருந்த பிரச்சினைகள் அனைத்தும் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இருந்தபோதும் அரச தரப்பினர் பொய் வதந்திகயை பரப்பி ஐக்கிய தேசிய கட்சி அங்கத்தவர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அதில் ஒரு அம்சமாகவே ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசுடன் இணையப்போவதாக பொய்களை பரப்பி விடுகின்றனர்.
அரச தரப்பினர் கூறும் விதத்தில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து எந்த ஒரு அங்கத்தவரும் அரசுடன் இணையப்போதவில்லை. எனவே எதிர்வரும் தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய அனைத்து அங்கத்தவர்களும் அயராது உழைக்க வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment