வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலேதன்ட, அமுனுவத்த பிரதேசத்தில் பொல்அத்து மோதர ஆற்றுக்கு அருகில் சென்ற நான்கு மாணவர்களில் இருவர் ஆற்றில் இறங்கிய போது இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதன் போது பிரதேச வாசிகளால் மாணவர்கள் இருவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் ஹனிபா மொஹமட் ரிமாஸ் என்ற 14 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை நேற்று வைத்தியசாலையில் இடம் பெறஇருந்தது.
நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்ட 15 வயதான அடுத்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வருகின்றான். இது தொடர்பில் மேலதிக விசார ணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment