மூன்றாம் முறையும் மஹிந்ததான் ஜனாதிபதி - பைஸர் முஸ்தபா
Thursday, November 13, 20140 comments
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லையென முதலீட்டு ஊக்குவிப்புப் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலைவிவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் குறைகூறுவதற்கு எதிர்க்கட்சியினருக்கு எதுவும் இல்லை. அதனால்தான் அவர்கள் அரசாங்கம் மீது சேறுபூசும் வகையிலான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அரசாங்கம் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து அதன் வழியில் முன்னேறிவருகிறது.
ஜனாதிபதி மூன்றாவது தடவையாகவும் போட்டியிடுவது என்ற விடயத்திலும் அரசாங்கம் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் சரியான பாதையிலேயே செயற்பட்டுள்ளது. ஜனாதிபதி தனக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அமைய இதுவிடயத்தில் உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானத்தைக் கோரியிருந்தார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைமுதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா சபைக்கு உத்தி யோகபூர்வமாக அறிவித்திருந்தார். அரசாங்கம் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் முறையான வழியிலேயே செயற்படுகிறது. இதனால் மக்கள் எப்பொழுது எமது பக்கம் உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment