ஒன்பதாவது சார்க் இ.என்.ரி. மருத்துவ மாநாடு கொழும்பில் இன்று
Thursday, October 9, 20140 comments
ஒன்பதாவது சார்க் காது மூக்கு தொண்டை வைத்தியர்களுக்கான மாநாடு இன்று (09) கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இன்று தொடங்கி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்மாநாடு தலை மற்றும் கழுத்து அறுவைச்சிகிச்சை நிறுவன கல்லுாரியினால் ஒழுங்கு செய்யப்பட்டதொன்றாகும்.
'பன்முகத்தன்மை மத்தியில் சிறப்பு நோக்கி ஒன்றாக' என்ற தொனிப்பொருளின் கீழே இவ்வருடத்துக்கான இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலை மற்றும் கழுத்து அறுவைச்சிகிச்சை கல்லுரியின் தலைவர் வைத்தியர் சாந்த பெரேரா தெரிவித்தார். விசேட வைத்தியர்களுக்காக இடம்பெறவுள்ள ஒன்பதாவது காது மூக்கு தொண்டை வைத்தியர்களுக்கான மாநாடு அனைத்து தொழிலுனர்களை கல்வியலாளர்களை ஒன்றிணைத்து சிறந்த அடித்தளத்திற்கு இட்டுச்செல்லுமென்பது கல்வியலாளர்களின் கருத்தாகும்.
சார்க் நாடுகளுக்கிடையே இடம்பெறவுள்ள இம்மாநாட்டின் மூலம் பல வைத்தியர்கள் ஒன்றிணைந்து தமது அனுபவங்களை புதிய கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடியும். மாநாட்டில் விரிவுரைகள் விளக்கவுரைகள் குழுக்கலந்துரையாடல்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எனப்பலவும் பரிமாறிக் கொள்ளப்படும்.
1998 ஆம் ஆண்டில் முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சார்க் நாடுகளுக்கிடையிலான மருத்துவ மாநாட்டின் மூலம் பிராந்திய மருத்துவர்கள் சிறந்த தொடர்புகளை பேணி தமக்குரிய வேலை வாய்ப்புக்களை பரிமாறிக் கொள்ள முடியும். இவ்வகையில் 04 ஆவது காது மூக்கு தொண்டை மாநாடு கடந்த 2004 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றது. இவ்வகையில் தற்போது இரண்டாவது தடவையாக இம்மாநாடு இலங்கையில் இடம்பெறுவது விசேட அம்சமாகும்.
நடந்து முடிந்த மாநாட்டில் 20 காது மூக்கு தொண்டை விசேட வைத்தியர்கள் 400 பிரதிநிதிகள் மற்றும் 30 சர்வதேச பேச்சாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். அவ்வகையில் இம்முறை இடம்பெறவுள்ள மாநாடும் அனைத்து மருத்துவ அதிகாரிகளையும் உள்ளடக்கி பலன்வாய்ந்த வகையில் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment