சர்வதேச மக்கள் தெரிவு விருது பரிந்துறை பட்டியலில் மெத்யூஸ்
Thursday, October 9, 20140 comments
சர்வதேச கிரிக்கெட் சபையின் ´எல்.ஜி சர்வதேச மக்கள் தெரிவு விருது’ வழங்கும் பட்டியலில் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டுக்கான எல்.ஜி சர்வதேச மக்கள் விருதுப் பட்டியலில் 5 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மகளிர் அணியின் அணித்தலைவர் சார்லோட் எட்வர்ட்ஸ், அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜோன்சன், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இதில் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களில் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும். இதற்கான வாக்களிப்பு முறை தொடங்கப்பட்டுள்ளது. இது இந்த மாதம் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வெற்றி பெற்ற வீரர் பெயரானது துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் சபை தலைமையிடத்தில் ஐசிசி தலைமை நிர்வாகியான டேவிட் ரிச்சர்ட்சன் மற்றும் ஐசிசி கிரிக்கெட் குழு தலைவர் அனில் கும்ளே ஆகியோர் முன்னிலையில் நவம்பர் 5ம் திகதி அறிவிக்கப்படும்.
இந்த விருதானது அணியில் புதுமை, அழுத்தத்தின் போது செயல்படும் தன்மை, முடிவெடுக்கும் திறமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது.
இந்த விருதினை ஏற்கனவே சச்சின் டெண்டூல்கர் (2010), குமார் சங்கக்காரா (2011, 2012) மற்றும் மஹேந்திர சிங் டோனி (2013) ஆகியோர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment