பொன்சேகாவின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறது
Friday, October 17, 20140 comments
ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் பெயர், 2014ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து இன்று நீக்கப்படவுள்ளது.
தேர்தல் திணைக்களத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் எமது செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு வினவியது.
இதன் போது கருத்து வெளியிட்ட அவர், இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்க தகுதியற்றவர்களின் பெயர்கள் இந்த மாதம் 31ம் திகதிக்கு முன்னர் நீக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இது தொடர்பில் இன்றையதினம் விசேட பேச்சுவார்த்தை ஒன்றும் நடத்தப்படவுள்ளதாக அவர் கூறி இருக்கிறார்.
இதன் போது சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டத்தின் படி இரண்டு வருடங்கள் வரையில் ஒருவர் சிறையில் இருப்பாராக இருந்தால், அவரது வாக்குரிமை 7 வருடங்களுக்கு ரத்து செய்யப்படும்.
இதன்படி சரத் பொன்சேகாவின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment