ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் அப்துல் மஜீத் (முன்னாள் எஸ்.எஸ்.பி.) ஐக்கியதேசிய கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது விடுக்கப்பட்டது.
இச்செய்தியாளர் சந்திப்பின்போது ஐ.தே.க. தவிசாளர் கபீர் ஹாஸிம் , புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஐ.தே.க.வில் இணைந்துகொண்ட அப்துல் மஜீதுக்கு அம்பாறை மாவட்ட அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.இதேவேளை கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் விரைவில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Post a Comment