பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்
Thursday, October 9, 20140 comments
நான்கு பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்துக்காக ஐந்து ஆப்கானிஸ்தானியர்கள் நேற்றைய தினம் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
காபுலில் உள்ள புல் ஈ கார்கீ சிறையில் வைத்து அவர்கள் தூக்கிலிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஐந்து பேரையும் தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கு மனித உரிமை அமைப்புகள் இறுதி நேரத்தில் முயற்சி மேற்கொண்டிருந்தன.
எனினும் இந்த முயற்சியை அதிகாரிகள் புறக்கணித்ததுடன், திட்டமிட்ட படி அவர்கள் ஐந்து பேரும் தூக்கிலிடப்பட்டனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment